Home இலங்கைஅந்தோனி வெரங்க புஷ்பிகாவும் கைதானார்!

அந்தோனி வெரங்க புஷ்பிகாவும் கைதானார்!

by admin

நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டங்களை நடத்தியமை – பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளர் அந்தோனி வெரங்க புஷ்பிகா கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் 09 ஆம் திகதி கோட்டையிலும், ஜூன் மாதம் 10 ஆம் திகதி பத்தரமுல்ல இசுறுபாயவிற்கு முன்பாகவும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டமைக்காக புஷ்பிகா நேற்று (27.-07-22) கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

27 வயதான தொடம்துவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த சந்தேக நபரான புஷ்பிகா மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு – கோட்டை காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இவர் ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், அவர் பல்கலைக்கழகத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தநிலையில் சந்தேகநபர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டா கோ கம போராட்டக்களத்தில் முன்னணி செயற்பாட்டாளராக ஒருவராக ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளர் அந்தோனி வெரங்க புஷ்பிகா செயற்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More