Home இலங்கைபூட்டியிருந்த கதவை திறந்து நகைகளை திருடியவர்கள் , மீளவும் கதவை பூட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்

பூட்டியிருந்த கதவை திறந்து நகைகளை திருடியவர்கள் , மீளவும் கதவை பூட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்

by admin

வல்வெட்டித்துறையில் பூட்டி இருந்த வீட்டைத் திறந்து சுமார் 16 பவுண் தங்க நகைகள் திருடிவிட்டு மீளவும் வீட்டின் கதவினை பூட்டி விட்டு திருடர்கள் தப்பி சென்றுள்ளனர். 

வல்வெட்டி என்ற இடத்தில்  இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

வீட்டிலிருந்தவர்கள் வீட்டுக்கு அண்மையில் உள்ள ஓர் இடத்துக்கு சென்றுவிட்டு திரும்பிய போதே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது, 11 பவுண் தாலிக்கொடி, 5 பவுண் காப்பு மற்றும் 19 ஆயிரம் ரூபாய் பணம் என்பனவே திருட்டுப்போயுள்ளன என வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மதிலால் வீட்டு வளாகத்துக்குள் நுழைந்த திருடர்கள் முன் கதவைத் திறந்து நகைகளைத் திருடிவீட்டு மீளவும் முன் கதை மூடிவிட்டுச் சென்றுள்ளார் என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More