யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பல்வேறு திணைக்களங்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் நோக்கில் யாழ்.மாவட்ட செயலகமும் தேசிய உற்பத்தித்திறன் செயலகமும் இணைந்து உற்பத்தித்திறன் சான்றிதழ் கற்கைநெறியை வழங்கியதோடு, இக் கற்கை நெறியை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ். மாவட்ட மேலதிக செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கலந்துகொண்டு மாவட்ட மேலதிக செயலர் கருத்துத் தெரிவிக்கும்போது,
“உற்பத்தித் திறனை அலுவலகத்தில் நடைமுறைப்படுத்துவதன் நோக்கம் பொதுமக்கள் சேவையை திருப்திகரமானதாக உறுதிப்படுத்துவதற்காகும்.
அதற்கேற்ப பெரும்பாலான அரச நிறுவனங்கள் பொதுமக்கள் சேவையை திருப்திகரமாக மேற்கொள்கின்றன.
தற்போது பயிற்சிகளை பெற்ற நீங்களும் அரச நிறுவனங்களில் பயனுறுதி மிக்க பொதுமக்கள் சேவைகளை வழங்குதல் வேண்டும்” எனவ தெரிவித்தார்.
இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் எஸ்.சி.என்.கமலராஜன், யாழ்ப்பாண
மாவட்ட செயலக உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அரச திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.