Home இலங்கைஹெரோயினுக்கு அடிமையான பாடசாலை மாணவன் கைது

ஹெரோயினுக்கு அடிமையான பாடசாலை மாணவன் கைது

மேலும் சில மாணவர்களும் அடிமையாம்

by admin

பாடசாலையில் இருந்து இடை விலகிய மாணவன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருள் பாவித்த நிலையில் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  நெல்லியடி காவல்துறையினரினால்  கைது செய்யப்பட்ட மாணவனிடம் , காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளில் , குறித்த மாணவன் தனது பாடசாலை கல்வியில் இருந்து இடை விலகியுள்ளதாகவும் , பின்னர் தானும் மேலும் சில மாணவர்களும் ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்தி கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மாணவனை  காவல்  நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் காவல்துறையினர் ,  மாணவனுடன் போதைக்கு அடிமையாகி உள்ள ஏனைய மாணவர்களை அடையாளம் கண்டு கொண்டுள்ளதாகவும், இவர்களுக்கு போதைப்பொருளை விநியோகம் செய்யும் நபர்கள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் , அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும்  தெரிவித்தனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More