423
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் வாள் செய்து கொண்டிருந்த நால்வரை காங்கேசன்துறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீடொன்றில் வைத்து வாள் செய்து கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வீட்டினை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தினர்.
அதன் போது வாள் செய்து கொண்டிருந்த நால்வரை கைது செய்து காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
Spread the love