485
மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலி எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற உள்ள நிலையில் அன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க மடு திருத்தலத்திற்கு செல்லவுள்ளார். -இந்த நிலையில் மடு திருத்தலத்தில் விசேட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.-இதனால் மடு திருத்தலத்திற்கு செல்லும் பக்தர்கள் பாதுகாப்பு கெடுபிடிகளால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. -ஜனாதிபதி உள்ளடங்களாக அமைச்சர்கள் பலரும் அன்றைய தினம் மடு திருத்தலத்திற்கு செல்ல உள்ளமையினால் இராணுவம் மற்றும் காவல்துறையினா் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் மடு திருத்தல நுழைவாயில் மற்றும் ஆலய வளாக பகுதிக்குச் செல்லும் போது இராணுவம் மற்றும் காவல்துறையினா் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற மையினால் முன்பு என்றும் இல்லாத அளவுக்கு தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக பக்தர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
Spread the love