352
இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பயணம் செய்துள்ளார்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்றைய தினம் புதன்கிழமை (23.08.23) யாழ்ப்பாணத்துக்கு பயணம் செய்த அமெரிக்க தூதர், பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
முன்னதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்த அமெரிக்க தூதர் வடக்கு மாகாணத்திற்கான சமூகப் பொருளாதார சவால்கள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பாக கலந்துரையாடினார்.
தொடர்ந்து, யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு, பயணம் செய்து அதனை பார்வையிட்டார்.
Spread the love