504
மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வரர் ஆலயத்திற்கு அடுத்து பெரிய ஆலயமாகவும் நானாட்டான் பிரதேசத்தில் புகழ் பூத்த ஆலயமாகவும் காணப்படும் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலய 15 நாட்கள் கொண்ட மகோற்சவ திருவிழா தீ மிதிப்பு வைபவத்துடன் நேற்று இரவு (30) மிகச்சிறப்பாக நிறைவுற்றது.
கடந்த 10-8-2023 அன்று வவுனியா சிவஸ்ரீ சன் முகநாதக் குருக்கள் தலைமையில் கொடியேற்றப்பட்டு வேட்டைத்திருவிழா சப்பரத் திருவிழா தேர் தீர்த்தம் காவடி என்று 15 நாட்கள் மிகவும் சிறப்பாக திருவிழாக்கள் நடை பெற்று நேற்றைய தினம் இரவு விரதம் இருந்து பக்தர்களின் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தியதுடன் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெற்றது.
Spread the love