296
மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு இன்றையதினம் சனிக்கிழமை பயணம் செய்துள்ளனர். ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஅத்தோ தலைமையிலான சுமார் 100க்கு மேற்பட்ட ஆதிவாசிகள் குழுவினரே யாழிற்கு பயணம் செய்துள்ளதுடன் இவர்கள் யாழின் முக்கிய இடங்களை பார்வையிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஅத்தோ தலைமையிலான குழுவினருக்கான வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. இரண்டு நாட்கள் யாழில் தங்கியிருக்கும் இவர்கள் பல்வேறு இடங்களுக்கும் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love