239
‘ஈழத்து சபரிமலை’ என அழைக்கப்படும் கோண்டாவில் சபரீச ஐயப்பன் ஆலய வருடாந்த மஹோற்சவம் நேற்று புதன்கிழமை (06.12.23) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது
தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இவ் ஆலய மஹோற்சவம் காலை, மாலை உற்சவங்களாக நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 13 ஆம் திகதி புதன்கிழமை இரவு 07 மணிக்கு சப்பரத் திருவிழாவும், 14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள்-15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும், அன்றைய தினம் இரவு 07 மணிக்கு கொடியிறக்க உற்சவமும் நடைபெறும்.
Spread the love