Home இலங்கைசூடு பிடிக்கும் கார்த்திகை பூ விவகாரம் – உயர் அதிகாரிகளே உத்தரவிட்டனர்!

சூடு பிடிக்கும் கார்த்திகை பூ விவகாரம் – உயர் அதிகாரிகளே உத்தரவிட்டனர்!

by admin

காவற்துறை உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமையவே பாடசாலை மாணவர்களை காவல்  நிலையம் அழைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெல்லிப்பழை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி இல்ல மெய்வல்லுனர் போட்டியில் கார்த்திகை பூ அலங்காரம் செய்யப்பட்டமை தொடர்பில் , மாணவர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினரிடம் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தமை தொடர்பில் ஆசிரியர் சங்கத்தினால் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த மனிதவுரிமை ஆணைக்குழு , காவற்துறையினரின்  வாக்கு மூலத்தினை பெறுவதற்காக, தெல்லிப்பழை காவல் நிலைய பொறுப்பதிகாரியை கடந்த வெள்ளிக்கிழமை , மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டது.

அதன் பிரகாரம் முன்னிலையான பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் , பொறுப்பதிகாரி விடுமுறையில் உள்ளதாக கூறி சம்பவம் தொடர்பிலான வாக்கு மூலம் வழங்கினார். அதன் போது தமக்கு காவற்துறை  உயர் அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தலின் பிரகாரமே மாணவர்களை காவல்  நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்ததாக தெரிவித்துள்ளார்.

வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் , அதன் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More