Home இலங்கைபூநகரியில் 10 கிலோ வெடிமருந்துடன் ஒருவர் கைது!

பூநகரியில் 10 கிலோ வெடிமருந்துடன் ஒருவர் கைது!

by admin

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் 10 கிலோ சி – 4 வெடி மருந்துடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பூநகரி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஆபத்தான வெடிமருந்தை , மோட்டர் சைக்கிளில் கடத்தி செல்வதாக பூநகரி காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் காவற்துறையின ர் விசேட நடவடிக்கையை மேற்கொண்டு , மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை பிடித்தனர்.

குறித்த நபரிடம் இருந்து 10 கிலோ நிறையுடைய சி – 4 ரக வெடிமருந்தை மீட்டனர். அதனை அடுத்து நபரை கைது செய்து பூநகரி காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More