யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து நேற்று (17.04.24) தப்பியோடிய கைதிகள் சுமார் 30 நிமிட இடைவெளியில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருட்டு குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவரும், விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவரும், வழக்கொன்றுக்காக யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து, சாவகச்சேரி நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர். அவர்களை சுமார் 30 நிமிட இடைவேளையில் காவற்துறையினர் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர்.
அதனை அடுத்து, தப்பியோடிய இருவருக்கு தலா 6 மாத கால சிறைத்தண்டனை விதித்த சாவகச்சேரி நீதவான், ஆயிரத்து 500 ரூபாய் தண்டமும் விதித்தார். தண்ட பணத்தினை கட்ட தவறின் மேலும் ஒரு மாத சாதாரண சிறைத்தண்டனை அனுவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.