டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து செய்யப்பட்டுள்ளதால் அந்த பதவி வெற்றிடமாகி உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான டயானா கமகேவின் பதவி 2024 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதால் அந்த பதவி வெற்றிடமாகியுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
1981 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(1) பிரிவின்படி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது