Home இந்தியாஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி

ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி

by admin


ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை கோரி முன்னாள் தமிழக முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் நாளை நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை எழும்பூர் ராஜ ரத்தினம் விளையாட்டு மைதானம் அருகில் நடத்திக்கொள்ள  காவல்துறையினர்  அனுமதியளித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 5ம் திகதி உயிரிழந்த முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், எனவே நீதி விசாரணை நடத்த வேண்டு மெனவும் வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் நாளை தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தனது ஆதர வாளர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

இது தொடர்பில்   ஓ.பன்னீர்செல்வத்தின்  ஆதரவாளர்கள் காவல்துறை ஆணையர் ஜோர்ஜை சந்தித்துப் பேசியதனையடுத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More