Home இந்தியாஅருணாசல பிரதேசத்தில் பா.ஜ.க – சிக்கிமில் கிராந்திகாரி மோர்ச்சா!

அருணாசல பிரதேசத்தில் பா.ஜ.க – சிக்கிமில் கிராந்திகாரி மோர்ச்சா!

by admin

இந்தியாவின் அருணாசல பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியை தக்கவைத்துள்ளதுடன், சிக்கிமில் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி அபார வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது.

இதில் அருணாசலபிரதேசம்,  சிக்கிம் சட்டசபை தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

அருணாசல பிரதேசத்திலுள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது.

எனினும், அங்கு ஏற்கனவே 10 பா.ஜ.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டமையால் எஞ்சிய 50 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

பெரும்பான்மைக்கு 31 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில் ஆளும் பா.ஜ.க. 47 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றிபெற்று அருணாசல பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்துள்ளது.

இதேவேளை சிக்கிம் பகுதியிலுள்ள 32 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது.

சிக்கிம் பகுதியில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி, பா.ஜ.க., சிக்கிம் ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More