Home இலங்கைஅருச்சுனா  இராமநாதன்  பிணையில் விடுவிப்பு

அருச்சுனா  இராமநாதன்  பிணையில் விடுவிப்பு

by admin

 

இன்று மாலை (29) கைது செய்யப்பட்ட நாடளுமன்ற உறுப்பினர் அருச்சுனா  இராமநாதன்  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தால், 2 லட்சம் ரூபா கொண்ட இரண்டு சரீர பிணையில்  அவா்  விடுவிக்கப்பட்டுள்ளாா். அத்துடன்  குறித்த வழக்கு விசாரணை பெப்ரவரி   3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கடந்த வாரம் அநுராதபுரம் காவல்துறைபிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை , கடமையில் இருந்த காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடா்பில்   நாடளுமன்ற உறுப்பினர் அருச்சுனா  இராமநாதனை யாழ்ப்பாணத்தில் வைத்து அநுராதபுரம் காவல்துறையினர் கைது செய்யப்பட்டிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More