1.1K
பாகிஸ்தான் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஆயுதக்குழு ஒன்றினால் பயணிகளுடன் கடத்தப்பட்ட புகையிரதத்திலிருந்து 300-இற்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த மீட்பு நடவடிக்கையின் போது 33 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாகவும் அந்நாட்டு இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளாா்.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் நேற்று முன்தினம்(11) பயணிகள் புகையிரதம் ஒன்று 440 பயணிகளுடன் ஆயுதக்குழு ஒன்றின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு அவா்கள் பணயக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love

