Home இலங்கைகாணிகளை கையகப்படுத்தும் வர்த்தமானியை இடைநிறுத்த உத்தரவு!

காணிகளை கையகப்படுத்தும் வர்த்தமானியை இடைநிறுத்த உத்தரவு!

by admin

காணி நிர்ணய சட்டம் பிரிவு 4க்கு அமைவாக வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் 28.03.2025 திகதியிடப்பட்ட 2430/25 இலக்கமிடப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தாக்கல் செய்த மனு இன்று வெள்ளிக்கிழமை (27.06.25)) விசாரிக்கப்பட்ட பின்னர் குறித்த வர்த்தமானியை தற்காலிகமாக  வலி தற்றதாக்கும் வகையில்  இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 02 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அதற்கிடையில் குறித்த வர்த்தமானியை மீள பெறுவதற்கான  வர்த்தமானியை அரசாங்கம் வெளியிட்டால் அதனை சமர்ப்பிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு இல. SC/FR/112/25 இல் மனுதாரர் M.A.சுமந்திரன் சார்பில் சட்டத்தரணி மோகன் பாலேந்திராவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் க. கனக ஈஸ்வரன், விரான் கொறேயா மற்றும் சட்டத்தரணிகள் பவானி பொன்சேகா, நிலோஷன் ரவீந்திரன், பெனிஸ்லஸ் துஷான் ஆகியோர் ஆஜராகினர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More