Home இலங்கைஐ.தே.க அரசாங்கத்தை கவிழ்க்க உதவத் தயார்- கூட்டு எதிர்க்கட்சி

ஐ.தே.க அரசாங்கத்தை கவிழ்க்க உதவத் தயார்- கூட்டு எதிர்க்கட்சி

by admin


ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு கூட்டு எதிர்க்கட்சி ஆதரவு வழங்கும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ரணி;ல் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பூரண அளவில் ஆதரவளிக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் மக்களின் அடிப்படை உரிமைகளை உதாசீனம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். ஒட்டுமொத்த அராசங்கத்தை கவிழ்க்கும் உத்தேசம் கிடையாது எனவும், ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தை வீழ்த்துவதே தமது நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலை நடத்தாமை உள்ளிட்ட மக்கள் விரோத செயற்பாடுகளில் அரசாங்கம் தொடர்ந்தும் ஈடுபட்டால், மக்களை அணி திரட்டி மாபெரும் போராட்டங்களை நடத்த நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More