Home இலங்கைஒரே பார்வையில் யாழ் மாவட்ட நிகழ்வுகள்!

ஒரே பார்வையில் யாழ் மாவட்ட நிகழ்வுகள்!

by admin

 

யாழ். வண்ணை வெங்கடேச ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.

 

யாழ்ப்பாண மாவட்ட செயலக நவராத்திரி பூஜை – பத்தாம் நாள் பூஜை இன்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இப்பூஜை நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாண மாவட்ட செயலர் ம.பிரதீபன், மேலதிக செயலர் கே.சிவகரன், நலன்புரிச் சங்க தலைவரும் புள்ளிவிபரப்பிரிவின் பிரதிப் பணிப்பாளருமான ம. வித்தியானந்தநேசன், உதவி மாவட்ட செயலாளர்  உ.தர்ஷினி, நிர்வாக உத்தியோகத்தர் ஆ. சத்தியமூர்த்தி , பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா!

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையும் , மாவட்ட செயலகமும், இணைந்து வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் அலகின் அனுசரணையுடன் நடாத்தும் பண்பாட்டு விழா மாவட்ட செயலகத்தில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியளவில் நடைபெறவுள்ளது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் . மாவட்ட செயலக முன்னாள் செயலர் இமல்டா சுகுமார் கலந்துகொள்ளவுள்ளனர்.
பண்பாட்டு ஊர்வலத்துடன் நிகழ்வு ஆரம்பமாகி தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெறும். அத்துடன் “யாழ்ப்பாணம்” நூல் வெளியீடும் நடைபெறவுள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More