Home இலங்கைபயங்கரவாத தடை சட்டத்தினை விட கொடுமையான சட்டத்தினை கொண்டுவர முயற்சிக்கின்றனர்

பயங்கரவாத தடை சட்டத்தினை விட கொடுமையான சட்டத்தினை கொண்டுவர முயற்சிக்கின்றனர்

by admin

 

பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குவதாக கூறி அதை விட கொடுமையான அடக்குமுறையான சட்டத்தினை தேசிய மக்கள் சக்தியினர் கொண்டு வரவுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் தெரிவித்துள்ளார்.  அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

உலக நாடுகள் , சர்வதேச அமைப்புக்கள் உள்ளிட்டவற்றின் அழுத்தங்கள் காரணமாக பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. அத்துடன் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாக்குறுதியிலும் பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குவோம் என உறுதி அளித்திருந்தனர்.  அதன் அடிப்படையில் அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதனால் அதனை நீக்கி விட்டு அதனை விட மிக மோசமான கொடூரமான சட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றனர்.
   பயங்கரவாத தடை சட்டத்தினால் அதிகமாக தமிழ் மக்களே தண்டனை அனுபவித்து வந்துள்ளனர். போராளிகள், சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மத தலைவர்கள் என கூறிக்கொண்டே போகலாம் இதனை ஓர் இனத்தின் மீது ஆயுதம் ஏந்தாமல் கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு வன்முறை ஆகும்,அதனாலேயே உலக நாடுகள் , சர்வதேச அமைப்புக்கள் என்பன பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.   அவர்களின் அழுத்தத்தால் , பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கிவிட்டு , அதனை விட கொடூரமான , மோசமான சட்டத்தினை கொண்டு வருவதனை ஏற்க முடியாது என மேலும் தெரிவித்தார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More