Home இந்தியாபசுவை கொல்பவர்கள் தூக்கில் போடப்படுவார்கள் – சத்தீஸ்கர் முதல்வர்

பசுவை கொல்பவர்கள் தூக்கில் போடப்படுவார்கள் – சத்தீஸ்கர் முதல்வர்

by admin


பசுவை கொல்பவர்கள் தூக்கில் போடப்படுவார்கள் என சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் தெரிவித்துள்ளார்.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி பொறுப்பேற்றதும் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த இறைச்சிக் கடைகளுக்கும், இறைச்சி வெட்டும் கூடங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங், பசுவைக்; கொன்றால் தூக்கில் போடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

ராய்ப்பூரில் பசுவதைக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்படுமா என செய்தியாளர்களால் கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.  சில தினங்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்திலும் பசுக்களை கொல்பவர்களுக்கு  7 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் குஜராத்தில் விலங்குகளை பாதுகாக்கும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More