Home இலங்கைஒக்ஸ்போர்ட் மாணவர்கள் எதிர்ப்பு – நாமலின் உரை நிறுத்தம்.

ஒக்ஸ்போர்ட் மாணவர்கள் எதிர்ப்பு – நாமலின் உரை நிறுத்தம்.

by admin

 

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற விவாதச் சங்கமான ‘ஒக்ஸ்போர்ட் யூனியனில்’ உரையாற்றுவதற்காக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுக்கு   விடுக்கப்பட்டிருந்த அழைப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.   இன்று நடைபெறவிருந்த இந்த உரையாடல் நிகழ்வுக்கு, ஒக்ஸ்போர்ட்பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.  மாணவர்களின் இந்தத் தீவிர எதிர்ப்பைத் தொடர்ந்து, நாமல் ராஜபக்ஸவின் உரையை ரத்து செய்ய ஏற்பாட்டுக் குழு தீர்மானித்துள்ளது.

நாமல் ராஜபக்ஸ  ஒரு பல்கலைக்கழக உரையை இழப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் கேம்பிரிட்ஜ் யூனியன் (Cambridge Union) அமைப்பும் அவருக்கு வழங்கியிருந்த விரிவுரை அழைப்பை ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

#நாமல் ராஜபக்ஷ #Namal Rajapaksa  #ஒக்ஸ்போர்டு_யூனியன் # Oxford Union #Sri Lanka Politics
#United Kingdom #OxfordUniversity

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More