Home இலங்கைஈரானிய கடற்படையினரின் சடலங்களை ஒப்படைக்குமாறு உத்தரவு

ஈரானிய கடற்படையினரின் சடலங்களை ஒப்படைக்குமாறு உத்தரவு

by admin

ஈரானிய கடற்படையினா்,சடலங்கள்,  காலி தேசிய வைத்தியசாலை

காலி தேசிய வைத்தியசாலையின் இரண்டு நடமாடும் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்களை, ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு காலி பிரதம நீதவான் சமீர தொடங்கொட இன்று (மார்ச் 11) காலி தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டார். காலி துறைமுகக் காவற்துறையினரால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விசேட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், இதற்கான அனுமதியை வழங்கினார். உயிரிழந்தவர்களின் சடலங்களை உரிய கௌரவத்துடன் அவர்களது தாய்நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்காக முன்னெடுக்கப்படும் இந்தத் தூதரக ரீதியான நடவடிக்கை, நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான IRIS Dena என்ற போர்க்கப்பல், இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படை கூட்டுப் பயிற்சியை முடித்துக்கொண்டு ஈரான் திரும்பிக்கொண்டிருந்த போது, இலங்கையின் தெற்கே சுமார் 40-50 கடல் மைல் தொலைவில் அமெரிக்காவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றினால் ஏவப்பட்ட டொர்பிடோ (Torpedo) ஏவுகணைத் தாக்குதலில்  முற்றாகத் தகர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

#GalleHospital #IranianNavy #DiplomaticHandover  #LegalOrder

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More