மருதனார்மடம் -   பூவாடை வீதியில் கிணறு ஒன்றிலிருந்து சடலம் மீட்பு

by admin

யாழ்ப்பாணம் சுன்னாகம்  காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதி –   பூவாடை வீதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (07) காலை    மீட்கப்பட்டுள்ளது. விவசாயி ஒருவர் தன் பயிர்களுக்கு நீர் எடுக்க கிணற்றிற்கு சென்ற போது கிணற்றின் அருகில் ஒரு ஜோடி செருப்பு காணப்பட்டதால் அவர் சந்தேகமடைந்து கிணற்றினுள் பார்த்தபோது, ஒரு ஆண் நபரின் சடலம் நீரில் மூழ்கிய நிலையில் இருப்பதை கண்டுள்ளார்.

உடனடியாக அவர் கிராம அலுவலருக்கு தகவல் அளித்துள்ளாா்.  சடலம் கிணற்றின் அடிப்பகுதியில் காணப்பட்டதுடன் அந்த நபரின் கழுத்தில் கயிறு சுற்றப்பட்டிருந்தது. இதனால், அந்த நபர் கொலை செய்யப்பட்டு பின்னர் சடலம் கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இறந்தவர் யார் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவம் தொடர்பாக சுன்னாகம்  காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு வந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#JaffnaCrime #ChunnakamPolice #Maruthanarmadam #UnidentifiedBody #MurderInvestigation

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More