பங்களாதேஷ் நாட்டில் 9 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் தட்டம்மை (Measles) நோய் பாதிப்பு தீவிரமாக அதிகரித்துள்ளது. 2020ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட COVID-19 தொற்று பரவல், மாணவர் போராட்டங்கள் மற்றும் அரசியல் நிலைதடுமாற்றம் போன்ற காரணங்களால், புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய தட்டம்மை தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் விளைவாக கடந்த 3 வாரங்களில் மட்டும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த ஆபத்தான நிலையை கட்டுப்படுத்தும் நோக்கில், பங்களாதேஷ் அரசு நாடு முழுவதும் அவசரகால தடுப்பூசி முகாம்களை ஆரம்பித்துள்ளது. சுகாதார அதிகாரிகள் பெற்றோர்களை தங்களது குழந்தைகளுக்கு அவசியமான தடுப்பூசிகளை உடனடியாக பெறச் செய்வதுடன், நோய் பரவலைத் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
#Bangladesh #MeaslesOutbreak #ChildHealth #EmergencyVaccination #HealthCrisis

