அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு செயலாளர்கள் குழுவினால் முன்வைக்கப்பட்ட முதற்கட்ட ஒப்பந்தத்தில் பெருமளவு மாற்றத்தை ஏற்படுத்த முடிந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். தாம் ஏற்படுத்திய இம்மாற்றமே நாட்டிற்கு கிட்டிய மாபெரும் வெற்றியெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியினை மாற்றியமைக்க வேண்டுமென கூறியவர்கள் என்ற வகையில் தாமும் பல தாக்குதல்களிற்கு முகங்கொடுத்துள்ளோம் எனவும் தெரிவித்த அவர் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ முன்வைக்கும் அமைச்சரவை பத்திரங்களை விமர்சிக்கும் உரிமை தமக்கு வழங்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னைய ஆட்சிக் காலத்தில் எவருக்கும் விமர்சனங்களை முன்வைப்பதற்கு அனுமதியளிக்கப்படவில்லை எனவும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இந்நிலையில் பெருமளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.