Home இலங்கைஇந்திராவிழாவில் சுகாதார சீர்கேட்டுடன் உணவு விற்பனையில் ஈடுபட்டவர்களுக்கு பிடியாணை

இந்திராவிழாவில் சுகாதார சீர்கேட்டுடன் உணவு விற்பனையில் ஈடுபட்டவர்களுக்கு பிடியாணை

by admin

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் அண்மையில் இடம்பெற்ற இந்திர விழா நிகழ்வின் போது, சுகாதார சீர்கேடான முறையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்த 12 வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் நீதிமன்றில் முன்னிலையாகாத 6 பேருக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த இவ்விழாவில், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதிக்கும் வகையில் செயற்பட்ட ஐஸ்கிறீம், பானிப்பூரி மற்றும் காரம் சுண்டல் விற்பனையாளர்களுக்கு எதிராகப் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

 கடந்த மே 1-ஆம் திகதி நடைபெற்ற இந்திர விழாவின் போது, பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) முன்னெடுத்த விசேட சோதனையில்   *ஐஸ்கிறீம் வாகனங்கள், பானிப்பூரி மற்றும் காரம் சுண்டல் விற்பனை நிலையங்களில் தூய்மையற்ற முறையில் உணவைக் கையாண்டமை, முறையான சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாமை  போன்ற சுகாதார விதிமுறைகளை மீறிய  12 விற்பனை நிலையங்கள்    கண்டறியப்பட்டது.

பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில்  நேற்றையதினம் வெள்ளிக்கிழமை (2026 மே 08) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.   நீதிமன்றில் முன்னிலையான 06 வியாபாரிகள் தமது குற்றத்தை ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு மொத்தமாக 1 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா தண்டப்பணம் (அபராதம்) விதிக்கப்பட்டது.  நீதிமன்ற அழைப்பாணையை மீறி, மன்றுக்கு சமூகமளிக்காத எஞ்சிய 06 உணவு விற்பனையாளர்களைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் பிடியாணை பிறப்பித்தார்.

இந்திர விழா போன்ற பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூடும் ஆன்மீக மற்றும் கலாசார நிகழ்வுகளில், உணவுப் பாதுகாப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். லாப நோக்கத்திற்காகச் சுகாதாரமற்ற முறையில் உணவுகளை விற்பனை செய்வது பாரிய நோய் பரவல்களுக்கு வழிவகுக்கும். பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களின் இக்கடுமையான கண்காணிப்பு மற்றும் நீதிமன்றத்தின் பிடியாணை உத்தரவு என்பன, எதிர்காலத்தில் இவ்வாறான விழாக்களில் ஈடுபடும் வியாபாரிகள் மத்தியில் ஒரு அச்சத்தையும் பொறுப்புணர்வையும் ஏற்படுத்தும். பொதுமக்கள் இத்தகைய திறந்தவெளி விற்பனை நிலையங்களில் உணவுகளைக் கொள்வனவு செய்யும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்.

#Valvettithurai  #IndraVizha  #HealthRaid #PointPedroCourt #FoodSafetyJaffna

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More