47
சிவில் பொறியியலாளர் – 10 வெற்றிடங்கள்
வரைவாளர் (Draughtsman) – 5 வெற்றிடங்கள்
தொழில்நுட்ப உத்தியோகத்தர் – 20 வெற்றிடங்கள்
வேலை மேற்பார்வையாளர் – 17 வெற்றிடங்கள்
வட மாகாணத்தில் ‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் சேதமடைந்துள்ள சாலைகள், கட்டிடங்கள் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்புகளை விரைவாகப் புனரமைக்கும் நோக்கில், ஒப்பந்த அடிப்படையில் தொழில்நுட்ப பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய வட மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கான நேரடி நேர்முகத் தேர்வு எதிர்வரும் வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு, வட மாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த ஆட்சேர்ப்பின் கீழ் நிரப்பப்படவுள்ள பணியிடங்கள்:
மொத்தமாக 52 வெற்றிடங்களுக்கு தகுதியானவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் நேரடியாக நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.
மேலதிக தகவல்கள் மற்றும் கல்வித் தகைமைகள் தொடர்பான முழு விவரங்களை வட மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிடலாம்.
வடக்கின் மீள்கட்டுமானப் பணிகளில் பங்கெடுத்து சமூக சேவையிலும் தொழில்வாய்ப்பிலும் இணைவதற்கான அரிய வாய்ப்பு இது.
Spread the love

