51
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுமார் 28 ஏக்கர் (11.2657 ஹெக்டயர்) பரப்பளவைக் கொண்ட காணியை பகிரங்கப் பொதுத்தேவைக்காக சுவீகரிக்கும் நோக்கில், நில அளவை பணிகளை முன்னெடுக்க நில அளவை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. மருதங்கேணி (ஜே/428) கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட “தேவதுரவு” என்று அழைக்கப்படும் காணியே இவ்வாறு சுவீகரிப்பு செய்யப்படவுள்ளது.
மருதங்கேணி பிரதேச செயலாளரின் 21-05-2026 திகதியிடப்பட்ட நில அளவைக் கோரிக்கைக்கு அமைவாகவும், காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சரின் வர்த்தமானி குறிப்பிற்கு இணங்கவும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 2026-07-09 ஆம் திகதி முதல் தொடர்ந்து வரும் வேலைநாட்களில், தினசரி காலை 9:00 மணி முதல் மாலை வரை காணி சுவீகரிப்புச் சட்டத்தின் பிரிவு 5 இன் கீழ் நில அளவை பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
குறித்த காணிக்கு உரிமை கோரும் பொதுமக்கள் அல்லது தரப்பினர் எவரேனும் இருப்பின், காணி தொடர்பான தகுந்த ஆவணங்களுடன் குறிப்பிட்ட திகதிகளில் வருகை தந்து, எல்லைகளைக் காண்பித்து நில அளவைத் திணைக்கள அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றீர்கள்.
Spread the love

