164
சென்னை பாரிமுனையில் சுரங்கப்பாதைக்குள் கார் பாய்ந்த விபத்தில், இலங்கை வெளவத்தையை சேர்ந்த சுற்றுலா பயணி உள்பட 5 பேர் காயமடைந்துள்ளனர். நேற்றுமாலை ராஜாஜி சாலையில் அவர்கள் பயணித்த கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து உயர்நீதிமன்றத்துக்கு அருகே உள்ள வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து எதிரேயுள்ள சுரங்கப்பாதைக்குள் வேகமாக பாய்ந்ததினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த கார் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து விழுந்ததால், சாரதி உள்பட 5 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்த 5 பேரும் மீட்கப்பட்டு வைத்தியாலையின் தீவிரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Spread the love