140
வடக்கு சிரியாவில் அமெரிக்க ஆதரவு பெற்ற படையினர் வசமிருந்த பகுதி ஒன்றில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலின் போது சுமார் 32 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றையதினம் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் கொல்லப்பட்டவர்களில் பொதுமக்களும் உள்ளடங்குவதாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்புக்கு குழு தெரிவித்துள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் சிரிய படையினருக்கும் இடையில் நடைபெற்று வரும் தாக்குதல்களினால் சிரியாவின் பல முக்கிய நகரங்கள் சேதமுற்றுள்ள நிலையில், கடந்த வாரம் சிரிய படையினரால் ரக்காவின் மேற்கில் அமைந்துள்ள டப்கா நகர் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Spread the love