0
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக கீதா குமாரசிங்க கடமையாற்றி வருகின்ற நிலையில் அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்கு தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கீதா குமாரசிங்க சுவிட்சர்லாந்து குடியுரிமையை கொண்டவர் என்பதனால் அவரால், இலங்கையின் பாராளுமன்றில் அங்கம் வகிக்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love