Home இலங்கைநாட்டுக்கு பாதகமான நிபந்தனைகளுடனான எந்தவொரு முதலீட்டு, வர்த்தக உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படமாட்டாது – ஜனாதிபதி

நாட்டுக்கு பாதகமான நிபந்தனைகளுடனான எந்தவொரு முதலீட்டு, வர்த்தக உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படமாட்டாது – ஜனாதிபதி

by admin


நாட்டுக்கு எந்தளவு பொருளாதார நலன்களைக் கொண்டுவந்தாலும், நாட்டுக்கு பாதகமான, பொருத்தமற்ற எந்தவொரு முதலீட்டு, வர்த்தக உடன்படிக்கைகளிலும் எந்தவொரு நாட்டுடனும் கையொப்பம் இடப்படமாட்டாதென ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனஇன்று (03) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சக்திவலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவலு அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின் நீண்டகால மின்னுற்பத்தி திட்டம் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், நாட்டின் மின்னுற்பத்தியின்போது சுற்றாடல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கி பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்காக பொருத்தமான கலப்பு மின்னுற்பத்தியை மேற்கொள்ளும் திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More