Home இலங்கைஇந்திய பிரதமரின் வருகை மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் அமைந்தது – அரசாங்கம்

இந்திய பிரதமரின் வருகை மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் அமைந்தது – அரசாங்கம்

by admin


இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை  மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய பிரதமரின் இலங்கை வருகையின் ஊடாக பொதுமக்கள் நன்மை அடைந்துள்ளதாகவும்  குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மலைநாட்டு மக்கள் நன்மை அடைந்துள்ளதாக வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மோடியின் வருகைக்கு எதிர்ப்பை வெளியிட வேண்டுமெனவும் கறுப்புக் கொடி போராட்டம் நடத்த வேண்டுமெனவும் கூட்டு எதிர்க்கட்சியினர் முயற்சித்திருந்தனர் என சுட்டிக்காட்டியுள்ள அவர் மக்களுக்கு தேவையானவை வழங்கப்படுவதனையே கூட்டு எதிர்க்கட்சி எதிர்த்து வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More