Home இலங்கைஐ.தே.கவின் முக்கிய மூன்று அமைச்சர்கள் பதவி விலகத் தீர்மானம்?

ஐ.தே.கவின் முக்கிய மூன்று அமைச்சர்கள் பதவி விலகத் தீர்மானம்?

by admin


ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய மூன்று அமைச்சர்கள் பதவி விலகத் தீர்மானித்துள்ளனர். அமைச்சரவை மாற்றத்தில் தமது அமைச்சுப் பொறுப்புக்கள் மாற்றப்பட்டால் இவ்வாறு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

தற்போது வகித்து வரும் சகல பதவிகளிலிருந்தும் விலக இவ்வாறு மூன்று சிரேஸ்ட அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர். அவசரமாக மேற்கொள்ளப்படும் அமைச்சரவை மாற்றத்தில் உடன்பாடு கிடையாது என கட்சித் தலைமையகத்திற்கு குறித்த அமைச்சர்கள் உத்தியோகப்பற்றற்ற ரீதியில் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More