புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேக நபர்களை எதிர்வரும் 31ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.ரியால் உத்தரவு இட்டுள்ளார்.
குறித்த வழக்கு இன்றைய தினம் புதன் கிழமை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றது. அதன் போது 10 சந்தேகநபர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனை அடுத்து அவர்களை தொடர்ந்து வழக்கினை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான் அதுவரையில் சந்தேக நபர்களை விளக்கமறியலில் தொடர்ந்து தடுத்து வைக்குமாறு நீதிவான் உத்தரவு இட்டார்.
அதேவேளை குறித்த சந்தேகநபர்களை கைது செய்த அப்போதைய ஊர்காவற்துறை போலிஸ் உத்தியோகஸ்தருக்கு கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பான வழக்கு விசாரணையும் இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன் போது கொலை மிரட்டல் விடுத்த மாணவி கொலை வழக்கின் முதலாவது சந்தேக நபர் மன்றில் முற்படுத்தப்பட்டார். அதனை தொடர்ந்து கொலை மிரட்டல் வழக்கினையும் நீதிவான் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன் சந்தேக நபரை அதுவரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவு இட்டார்.