Home இலங்கைபாடசாலை நிகழ்வுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரை அழைத்தமைகாக விளக்கம் கோரிய கல்வி அமைச்சு

பாடசாலை நிகழ்வுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரை அழைத்தமைகாக விளக்கம் கோரிய கல்வி அமைச்சு

by admin
கிளிநொச்சி இந்துக் கல்லூரி பாடாசாலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை அழைத்தமை தொடர்பில்  விளக்கம் அளிக்குமாறு வலயக் கல்விப் பணிப்பாளார் ஊடாக அதிபரிடம்  வடக்கு மாகாண கல்வி அமைச்சு விளக்கம் கோரியுள்ளது.
இது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
கல்வி அமைச்சரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள வ.மாஅஅஃகபவிஇஃக05(4) இலக்க 12-04-2017 திகதிய கடிதம் தொடர்பில்கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் தொழிநுட்ப பீட திறப்பு விழாவிற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டு  கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் இவ் விழாவிற்கு வடக்கு மாகாண சபை மக்கள் பிரதிநிதிகள் எவரும் அழைக்கப்படவில்லை
எனவே இவ்விடயம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பிரதம விருந்தினராக அழைத்தன் பின்னனி மற்றும் வடக்கு மாகாண சபை  மக்கள் பிரதிநிதிகள் எவரையும் அழைக்காமை  என்பவற்றுக்கான விளக்கத்தை பாடசாலை அதிபர் ஊடாக பெற்று தங்களின் அறிக்கையை அனுப்பி வைக்குமாறு   கல்வி அமைச்சின் செயலாளரினால் கிளிநொச்சி  வலயக் கல்விப் பணிப்பாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாடசாலை அதிபர் விக்கினராஜாவை தொடர்பு கொண்டு வினவிய போது தங்களின் பாடசாலைக்கு தொழிநுட்ப பீடம் வருவதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரே காரணமாக இருந்தவர்  அவரின் முயற்சினாலேயே பாடசாலைக்கு தொழிநுட்ப பீடம் கிடைத்தது.  அத்தோடு நாங்கள் தொழிநுட்ப பீட திறப்பு விழா செய்யவில்லை சம்பிரதாயபூர்வ சமய நடவடிக்கைகளையே மேற்கொண்டோம்  எனவே அதில் பாடசாலை சமூகத்தின் விருப்பின் பேரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரை அழைத்திருந்தோம் எனத் தெரிவித்தார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More