Home இலங்கைஇணைப்பு 3- வெள்ளவத்தையில் கட்டடம் இடிந்து வீழ்ந்த இடத்தில் மீட்பு பணிகள் தொடர்கின்றன.

இணைப்பு 3- வெள்ளவத்தையில் கட்டடம் இடிந்து வீழ்ந்த இடத்தில் மீட்பு பணிகள் தொடர்கின்றன.

by admin

வெள்ளவத்தையில் கட்டடம்  ஒன்று இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் காயமடைந்துள்ள  நிலையில் தொடர்ந்தும் மீட்புப்பணிகள் தொடர்கின்றன.

இந்த மீட்புப்பணிகளில் காவல்துறையினர் மற்றும் முப்படையினருடன் பொதுமக்களும் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 31யு வயதான ரத்நாயக்கா என அடையாளம் காணப்பட்டள்ளார். மேலும் இடிபாடுகளில் சிக்கிய இருவர்களில்  ஒருவர்  கண்டுபிடிக்கப்பட்டு  அவரை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும்  மற்றையவரை தேடும் பணிகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இணைப்பு 2 வெள்ளவத்தையில் கட்டடம் இடிந்து வீழ்ந்து விபத்து  -21  பேர் காயம்

May 18, 2017 @ 06:59

வெள்ளவத்தையில் கட்டடம்  ஒன்று இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கட்டடம் இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தபட்சம் 21  பேர் காயமடைந்துள்ளனர் எனவும் காயமடைந்தவர்கள் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More