Home இலங்கைமுஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்க உள்ளனர்

முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்க உள்ளனர்

by admin

முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க உள்ளனர். சந்திப்பு ஒன்றை நடாத்த சந்தர்ப்பம் வழங்குமாறு முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளதற்கேற்ப இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் மீளவும் தலைதூக்கியுள்ளதாக தெரிவித்துள்ள அவர்கள் விரைவில் ஜனாதிபதியை சந்தித்து தமது பிரச்சினைகளை தெளிவுபடுத்த உள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இன மற்றும் மதக் குரோத செயற்பாடுகளை தடுக்க அரசாங்கம் இதுவரையில் காத்திரமான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More