159
முள்ளிவாய்க்கால் நினைவாக நடத்தப்பட்ட உதைப்பாந்தாட்ட போட்டியில் மன்னார் பள்ளிமுனை சென்லூசியா விளையாட்டுக்கழகம் சுவீகரித்து இரண்டு இலட்சம் ரூபா பணத்தையும் நினைவு வெள்ளிக்கிண்ணத்தையும் தமதாக்கியுள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை ( 21-05-2016) பிற்பகல் மூன்று முப்பது மணிக்கு கிளிநொச்சி உதயதாரகை விளையாட்டுக்கழ மைதானத்தில் இடம்பெற்ற இறுதி போட்டியில் மன்னார் சென்லூசியா அணியும், யாழ்ப்பாணம் ஊரேழு றோயல் விளையாட்டுக் கழக அணியும் பங்குபற்றியது.
போட்டி முடியும் போது இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்கள் பெற்ற நிலையில் வெற்றியை தீர்மானிக்கும் தண்ட உதைக்கு இரு அணிகளையும் ஏற்பாட்டாளர்கள் கொண்டு சென்றனர் இதன் போது 5 இற்கு 4 என்ற நிலையில் மன்னார் சென் லூசியா அணி முள்ளிவாய்க்கால் நினைவு கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. இவர்களுக்கு நினைவு வெற்றிக் கிண்ணமும் இரண்டு இலட்சம் ரூபா பணமும் வழங்கப்பட்டது.
அத்தோடு இரண்டாவது இடத்தை பெற்ற யாழ் ஊரேழு றோயல் அணிக்கு நினைவு வெற்றிக் கிண்ணமும் ஒரு இலட்சம் ரூபா பணமும், மூன்றாவது இடத்தை பெற்றுக்கொண்ட கிளிநொச்சி உதயதாரகை அணிக்கு வெற்றிக்கிண்ணமும், ஜம்பதாயிரம் ரூபா பணமும் வழங்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவாக அக்கினி சிறகுகள் அமைப்பின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் இருந்து கலந்துகொண்ட 99 அணிகளுக்கிடையே கடந்த ஒரு மாததிற்கு மேலாக இடம்பெற்று வந்த உதைப்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இது முள்ளிவாய்க்கால் நினைவாக நடத்தப்பட்ட இரண்டாவது உதைப்பந்தாட்ட போட்டியாகும்.
Spread the love