Home இலங்கைஇரவு நேர கேளிக்கை விடுதி மோதல் குறித்து ஜனாதிபதி உத்தரவில் பூரண விசாரணை

இரவு நேர கேளிக்கை விடுதி மோதல் குறித்து ஜனாதிபதி உத்தரவில் பூரண விசாரணை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

கொழும்பு இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து பூரண விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக பிரதி ஊடக அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார்.
கொழும்பு யுனியன் பிளேஸில் அமைந்துள்ள இரவு நேர கேளிக்கை விடுதியொன்றில் இந்த மோதல் சம்பவம் அண்மையில் இடம்பெற்றிருந்தது.

இந்த சம்பவம் குறித்து பூரண விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறை முறைப்பாடு செய்யப்பட்டாலும் இல்லாவிட்டாலும், தாக்குதல் சம்பவத்துடன் ஜனாதிபதியின் புதல்வர் தஹாம் சிறிசேனவின் பெயரும் பேசப்பட்டு வருகின்றமையினால் ஜனாதிபதி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

investigation
முறைப்பாடு எதுவும் இல்லாவிட்டாலும் சம்பவம் குறித்து முழு அளவில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கூறியுள்ளதாக, பிரதி ஊடக அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து ஜனாதிபதி விசாரணைப் பிரிவினர் தனியான விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More