Home இலங்கைஅமைச்சரவை மாற்றத்தினால் ஐக்கிய தேசியக் கட்சிக்கே நட்டம்

அமைச்சரவை மாற்றத்தினால் ஐக்கிய தேசியக் கட்சிக்கே நட்டம்

by admin


அமைச்சரவை மாற்றத்தினால் ஐக்கிய தேசியக் கட்சிக்கே நட்டம் ஏற்பட்டுள்ளது என ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தினால் நல்லாட்சி அரசாங்கத்தினை ஆட்சிப் பீடத்தில் ஏற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கட்சியின் கீழ் மட்ட தலைவர்கள் உதாசீனம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் தேர்தல்களை இலக்கு வைத்து அமைச்சரவை மாற்றம் குறித்த காய் நகர்வுகளை மேற்கொண்டுள்ளமை தெளிவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் இந்த முயற்சியினால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை விஸ்தரிக்கும் வகையிலேயே அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More