Home இலங்கைஅனர்த்தத்திற்குள்ளான இரத்தினபுரிக்கு ஜனாதிபதி சென்றுள்ளார்.

அனர்த்தத்திற்குள்ளான இரத்தினபுரிக்கு ஜனாதிபதி சென்றுள்ளார்.

by admin


சீரற்ற வானிலை காரணமாக அனர்த்தத்திற்குள்ளான இரத்தினபுரி மாவட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக கண்டறிவதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனஇன்று (29) முற்பகல் இரத்தினபுரி மாவட்ட செயலகத்திற்கு சென்றுள்ளார்.

அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண நடவடிக்கைகளின் ஒவ்வொரு துறை தொடர்பாகவும் இதன்போது விடயங்களைக் கண்டறிந்த ஜனாதிபதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயர்ந்தபட்ச நிவாரணங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும் நிதி உதவிகள் அவசியமாயின் உடனடியாக தெரிவிக்குமாறு மாவட்ட செயலாளருக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி விசேடமாக படகுகளினால் அண்மிக்க முடியாத உயிர் அச்சுறுத்தல் உடைய பிரதேசங்களில் சிக்கியிருக்கும் மக்களை மீட்பதற்கு விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவும் ஆலோசனை வழங்கினார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More