பிரெஞ்சு ஓபன் போட்டித் தொடரின் காலிறுதிச் சுற்றில் சேர்பிய வீரர் நொவாக் டுஜொவிக் தோல்வியைத் தழுவியுள்ளார். ஒஸ்ட்ரிய வீரர் டொமினிக் தீம் (Dominic Thiem ) இடம் டுஜொவிக் தோல்வியைத் தழுவியுள்ளார்.
பாரிசில் நடைபெற்று வரும் இந்தப் போட்டித் தொடரில் 7-6 (7-5) 6-3 6-0 என்ற செற் கணக்கில் டுஜொவிக், டொமினிக்கிடம் தோல்வியடைந்துள்ளார். டொமினிக் தீம பிரபல வீரர் ரபால் நடாலை அரையிறுதிப் போட்டியில் எதிர்த்தாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2016ம் ஆண்டில் டுஜொவிக் பிரெஞ்சு ஓபன் போட்டித் தொடரில் சாம்பியன் பட்டம் வெற்றிருந்தார். 1969ம் ஆண்டின் பின்னர் ஒரே ஆண்டில் நான்கு கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றே ஒரே வீரர் என்ற பெருமையை டுஜொவிக் பெற்றுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.