Home இலங்கைஅமைச்சர்கள் தாமாக முன் வந்து பதவி விலக கோரினார் முதலமைச்சர்.

அமைச்சர்கள் தாமாக முன் வந்து பதவி விலக கோரினார் முதலமைச்சர்.

by admin

குற்றசாட்டுக்களுக்கு உள்ளான அமைச்சர்கள் இருவரும் தாமாக முன்வந்து பதவி விலகுமாறு வடமாகாண முதலமைச்சர் வலியிறுத்தி உள்ளார். நாளை 12 மணிக்குள் தமது  பதவிவிலகல் கடிதங்களை தன்னிடம் ஒப்படைக்குமாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் வடக்கு அமைச்சர்கள் விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்க அஅனுமதி மறுக்கப்பட்டதனால் மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா வெளிநடப்பு செய்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக  முதலமைச்சர் தனது கருத்தை தெரிவிப்பதற்கு அவைத்தலைவர் சந்தர்ப்பம் வழங்கியதனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுங்கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமது கருத்துக்களை முன்வைத்ததோடு, குறித்த இரு அமைச்சர்களும் தாமாகவே முன்வந்து நாளைய தினம் தமது பதவிவிலகல் கடிதங்களை  ஒப்படைக்க வேண்டுமென தெரிவித்தார்.

மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட ஏனைய இரு அமைச்சர்களான ப.சத்தியலிங்கம் மற்றும் பா.டெனீஸ்வரன் ஆகிய இருவருக்கும் எதிரான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து சபை நடவடிக்கைகள் எதிர்வரும் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More