Home இலங்கைஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாது- மஹிந்த ராஜபக்ஸ

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாது- மஹிந்த ராஜபக்ஸ

by admin


குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் நடத்தப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரக் கட்சி தொடர்பிலான எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் கட்சியின் உறுப்பினர்களுடன் மட்டுமே நடத்தப்படும், ஜனாதிபதியுடன் நடத்தப்படாது எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவிற்கும் மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்த – மைத்திரிபால தரப்புக்களை ஒன்றிணைப்பதற்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More