Home இலங்கையாழ்.மக்களின் உடலில் பௌத்த துறவிகளின் குருதி ஓடும் :

யாழ்.மக்களின் உடலில் பௌத்த துறவிகளின் குருதி ஓடும் :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாண மக்களின் உடலில் இனி பௌத்த பிக்குகளின் குருதியே ஓடும் என வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.  இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையினால் நடாத்தப்பட்ட என்.வி.கியூ பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

அந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் வந்த பௌத்த பிக்குகள் யாழ். போதனா வைத்திய சாலைக்கு சென்று எமது சகோதர மக்கள் சுகவீனம் அடைந்து அவர்களுக்கு குருதி தேவைப்படும் போது தமது குருதியை வழங்குங்கள் என குருதி வழங்கி உள்ளனர். எனவே எதிர்காலத்தில்  சுகவீனம் குணமடைந்து செல்லும் மக்களின் உடலில் அந்த பௌத்த பிக்குகள் வழங்கிய குருதியே இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வடமாகாண முதலமைச்சர் தனது இரண்டு பிள்ளைகளையும் சிங்கள சம்பந்திகளுக்கு திருமணம் செய்து கொடுத்து அவர்கள் வீட்டினுள் சந்தோசமாக வாழ்கின்றனர் எனவும் இதேபோன்று நாமும் இன மத வேறுபாடுகள் இன்றி அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனவும் அவர்  தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தென்னிலங்கையில் இருந்து வந்து யாழ்.போதனா வைத்திய சாலைக்கு சென்ற பௌத்த பிக்குகள் இரத்த தானம் வழங்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More