Home இலங்கைபுதிய அரசாங்கமொன்றை தெரிவு செய்ய வேண்டிய காலம் உருவாகியுள்ளது – ஜே.வி.பி.

புதிய அரசாங்கமொன்றை தெரிவு செய்ய வேண்டிய காலம் உருவாகியுள்ளது – ஜே.வி.பி.

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

புதிய அரசாங்கமொன்றை தெரிவு செய்ய வேண்டிய காலம் உருவாகியுள்ளது என ஜே.வி.பி கட்சி அறிவித்துள்ளது. இதனைத் தெரிவித்துள்ள ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிப்பது என்பது சிரமமான காரியமன்று என குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இதற்கு முன்னைய மஹிந்த அரசாங்கத்தை மீளவும் ஆட்சி பீடத்தில் ஏற்றுவதனால் இந்த அரசாங்கத்தை தோற்கடிப்பதில் அர்த்தமில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர் மெய்யான மாற்றம் ஒன்றையே விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

மஹிந்த அரசாங்கம் மக்களிடமிருந்து திருடியது எனவும், தற்போதைய அரசாங்கம் மத்திய வங்கியிலிருந்து திருடுகின்றது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More